சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், அதை ரூ.2லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் பல நிவாரண தொகைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. திமுக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாற்றுத்திறநாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. உலக வங்கியின் நிதியுதவியுடன் 1763 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரைட்ஸ் திட்டம் எனப்படும் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் […]