தமிழ் படத்தில் தமிழ் நடிகர்கள் மட்டும் தான் நடிக்கணுமா? FEFSI முடிவுக்கு சமுத்திரக்கனி பதில்!

சென்னை: தமிழ் படத்தில் தமிழ் நடிகர்கள் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று FEFSI எடுத்த அதிரடியான முடிவுக்கு நடிகர் சமுத்திரக்கனி பதில் அளித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி, பொதுச்செயலாளர் பி.என்.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அதில், தமிழ் திரைப்படங்களில் தமிழகத்தில் உள்ள நடிகர்கள், தொழிலாளர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை, தயாரிப்பாளர்களை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் ஷூட்டிங்: தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பை தமிழகத்திலேயே நடத்திட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளிமாநிலங்களிலும், வெளி நாட்டிலும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் மற்ற படி தமிழ்நாட்டியே படப்பிடிப்பை நடித்த வேண்டும் என்றனர். இயக்குநரே எழுத்தாளராக இருந்தால், கதை உரிமையில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அவரே பொறுப்பேற்க வேண்டும். தயாரிப்பாளரையோ, திரைப்படத்தையோ அந்த பிரச்சினை பாதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

சமுத்திரக்கனி பதில்: ஃபெஃப்சியின் இந்த முடிவுக்கு சமுத்திரக்கனி பதில் அளித்துள்ளார். அதில் தமிழ் படத்தில் தமிழ் நடிகைகள் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று FEFSI எடுத்த அதிரடியான முடிவுக்கு நடிகர் சமுத்திரக்கனி பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் ப்ரோ மூவி போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையில் பிஸியாக இருப்பதால், அந்தச் செய்தி எனக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது.

கலைக்கும் மொழி இல்லை: தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) இந்த முடிவு சாத்தியமில்லாத ஒன்று, கலைக்கும் மொழிக்கும் தடைகள் இல்லை. தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) அந்த முடிவை எடுத்தால் அது தவறான முடிவாகும். தெலுங்கு இயக்குனர் தமிழ் நடிகர்களை வைத்து படம் எடுத்தனர். தெலுங்கு சூப்பர் ஸ்டாரை வைத்து கன்னட இயக்குனர் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்தியத் திரைப்படத் துறையும் கலையும் பிராந்தியம் மற்றும் மொழியின் தடைகளை நீக்கி வருகின்றன. அது இந்திய மற்றும் பிராந்திய திரைப்படத் துறைக்கு உதவாது என்று நடிகர் சமுத்திரகனி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.