மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அஜந்தா குகை அருகே செல்ஃபி எடுத்த 30 வயது வாலிபர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். சோய்கான் தாலுகாவில் உள்ள நந்தண்டாவில் வசிக்கும் கோபால் சவான், தனது நண்பர்கள் நான்கு பேருடன் ஞாயிற்றுக்கிழமை அஜந்தா குகைகளை சுற்றிப் பார்க்கச் சென்றார். அஜந்தா குகைகளுக்கு எதிரே உள்ள வியூ பாயின்ட் நீர்வீழ்ச்சி அருகே செல்ஃபி எடுக்கும்போது அவர் கால் தவறி 2000 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். […]