லிப்ட் அறுந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பரிதாப பலி… சிமெண்ட் தொழிற்சாலையில் கோர விபத்து!

தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டை மாவட்டம் மேலசெருவு கிராமத்தில் மை ஹோம் சிமெண்ட் என்ற சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த சிமெண்ட் தொழிற்சலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த சிமெண்ட் தொழிற்சாலையின் 6வது தளத்தில் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிமெண்ட் கலவை பிளாக்குகளை லிப்ட் மூலம் 6வது தளத்திற்கு கொண்டு சென்றனர்.

எதிர்பாராத விதமாக லிப்ட் பாதி வழியிலேயே 4 வது தளத்தில் நின்றுள்ளது. இதையடுத்து லிப்ட்டை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென லிப்ட் அறுந்து விழுந்தது. இதில் லிப்ட்டில் இருந்த தொழிலாளர்கள் கீழே விழுந்து காயமடைந்ததோடு, கீழே வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் கான்க்ரீட் சிமெண்ட் கலவை விழுந்தது.

இதில் பலர் படுகாயம் அடைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கோர விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்.

இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை… கோரத் தாண்டவம் ஆடும் பருவமழை… கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!

கடந்த மாதம் விசாகப்பட்டினத்தின் புறநகரில் உள்ள அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்யுதபுரம் SEZ இல் உள்ள சாஹிதி பார்மா யூனிட்டில் அணுஉலை வெடித்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.