சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி. ராஜா சென்னையில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாஜக ஆளும் மணிப்பூரில் குக்கி இனத்தவருக்கும், மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியுள்ளது. இதில் சில தினங்களுக்கு முன்பு குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்து சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா பங்கேற்றார். இதையடுத்து, அங்குள்ள செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
இரக்கமற்ற மிருகப் பிறவி.. காயமடைந்த நபர் மீது சிறுநீர் கழித்த கொடூரன்.. தூக்கிய ‘காக்கி’
அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த கட்சியினர், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.