கர்நாடகா மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்பு பெரிதாக இருக்கும் மாவட்டங்களில் உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரைகளின் படி பொதுமக்கள் செயல்பட வேண்டும். மழையால் ஆபத்து ஏற்படக் கூடிய பகுதிகளில் அரசு உரிய ஆய்வுகள் செய்துள்ளது. அங்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கலபுர்கி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று (ஜூலை 26) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தெலங்கானா மாநிலத்திலும் கனமழை பெய்து வருவதால் இன்று (ஜூலை 26), நாளை (ஜூலை 27) என இரண்டு நாட்களுக்கு அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரைகார் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, அங்குள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.