அண்ணாமலை ஏன் அதைப்பத்தி மட்டும் பேசல? சீமான் நறுக்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலையின் நடை பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், நடை பயணம் மேற்கொண்டால் ஏதாவது தாக்கம் ஏற்படும் என பாஜக நம்புவதாகவும், எல்லா தலைவர்களும் இப்படி நடை பயணம் மேற்கொள்வது வழக்கமாகி விட்டது என்றும் கூறினார்.

மேலும் அண்ணாமலை ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க உள்ளது குறித்தும் திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிடுவது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, அதிமுக அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குகளும் ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளபோது அவர்களுடைய சொத்துப்பட்டியலை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை நேர்மையானவர் என்றால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டியதுதானே என்றும் சீமான் கூறினார். மேலும் அதிமுக கூட்டணியில் இருப்பதால், அவர்களை பாஜக புனிதமாக்குகிறது என்றும், திமுகவை பற்றி மட்டும் பேசுவது அரசியல் லாபத்திற்காகதான் என்றும் குற்றம்சாட்டினார்.

idumbavanam karthik latest speech – மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பும் சீமான் – – manipur news

மேலும் கோடநாடு கொலை வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பிய சீமான், ஒரு நிமிடம் கூட மின்சாரம் துண்டிக்கப்படாத கோட நாட்டில் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது எப்படி? 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதைப்பற்றி அண்ணாமலை பேசுவதில்லை என்றார்.

காங்கிரஸ் ஆட்சியிலும் மணிப்பூரில் ஏற்பட்டது போன்ற கலவரங்கள் நடைபெற்றன என்றும், அப்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்து பேசின என்று கூறிய சீமான், தற்போது மணிப்பூர் கலவரத்தை வைத்து காங்கிரஸ் புனிதர் வேடம் போடுவதாக விளாசினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டை குறி வைக்கிறார் என்று கூறிய சீமான், பிரதமர் மோடி தொடர்ந்து பாரதியார் திருவள்ளூர் மற்றும் அவ்வையார் குறித்து பேசி வருகிறார். மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் பிரதமர் போட்டியிடுகிறாரே என்ற அதிர்வு ஏற்படும் என பாஜக எதிர்பார்ப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.