வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரோட்ஸ்: கிரீஸ் நாட்டில், மூன்றாவது ஆண்டாக கடுமையான வெப்ப அலை மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஷியசை கடந்ததால், பெரும்பாலான தீவுகளில் காட்டுத்தீ பரவி உள்ளது. இது குறித்து, காட்டு தீ காரணமாக, எங்கள் நாட்டில் போர்ச் சூழல் நிலவுகிறது என அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில், கடந்த 2017 மற்றும் 2022ல் கடுமையான வெப்ப அலை ஏற்பட்டது. அதன் பின், மூன்றாவது முறையாக தற்போது கடும் வெப்பம் நிலவுகிறது. குறிப்பாக, கார்பூ, எவியா மற்றும் ரோட்ஸ் தீவுகளில் மலைகளால் சூழப்பட்ட வனப்பகுதியில் வெப்பம் காரணமாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
அங்குள்ள 20,000த்துக்கும் மேற்பட்ட மக்கள், குறிப்பாக சுற்றுலா பயணியரை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 500 தீயணைப்பு வீரர்கள், 100 தீயணைப்பு வாகனங்கள், ஏழு விமானங்களை ஐரோப்பிய யூனியன் அனுப்பி வைத்து உள்ளது. துருக்கி, இஸ்ரேல், எகிப்து உள்ளிட்ட நாடுகளும் உதவிகளை செய்து வருகின்றன.
இது குறித்து கிரீஸ் அரசு தரப்பில் வெளியிட்ட அறிக்கை: “காட்டுத் தீ மிகவும் ஆபத்தானது. தீர்மானிக்க முடியாதது. காட்டுத் தீயால் பாதிக்கப்படக் கூடிய பகுதிக்கு நீங்கள் பயணிக்க வேண்டியிருந்தால், நீங்கள் செல்லும் பகுதி காட்டுத் தீயினால் பாதிக்கப்படவில்லையா என்பதைச் கேட்டறிந்த பின் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement