இன்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்.. 4 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்ன மோடி!

புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வந்துள்ள நிலையில், இதனை 2019-ம் ஆண்டே பிரதமர் நரேந்திர மோடி கணித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் அமளியும் துமளியுமாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மணிப்பூர் கலவரமும் அதன் தொடர்ச்சியாக நடந்த பாலியல் பலாத்கார சம்பவமும் நாடாளுமன்றத்தில் நெருப்பாக எரிந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும், தங்களையும் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

“போரில் பங்கேற்க தயாராகுங்கள்”.. நாட்டு மக்களுக்கு ராஜ்நாத் சிங் பகிரங்க அழைப்பு.. அலறும் பாகிஸ்தான்

ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் கலவரத்தை காரணம் காட்டி மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று கொண்டு வந்தது. மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலங்கானா ராஷ்டிர சமிதி கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு தீர்மானங்களும் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரைவில் விவாதத்திற்கு வரவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதுவும் இப்போது அல்ல. 5 ஆண்டுகளுக்கு முன்பு 2019-ம் ஆண்டின் வீடியோ அது. அதாவது 2018-ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன. ஆனால், அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதன் தொடர்ச்சியாக, 2019-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், “மக்களுக்கு செய்த சேவையால் நாங்கள் இங்கு ஆளுங்கட்சியாக இருக்கிறோம். ஆனால் அராஜகப்போக்கால் 400 எம்.பி.யில் இருந்து 40 எம்.பி.க்களாக ஒரு கட்சி (காங்கிரஸ்) சுருங்கிவிட்டது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தால் என்ன? 2023-ம் ஆண்டு எனது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போதாவது வெற்றி பெற முடியுமா என்று பாருங்கள்” என மோடி பேசி இருந்தார்.

மதுபானங்களையே பாட்டிலில் விற்கிறோம்.. ஆவின் பாலை பாட்டிலில் விற்க முடியாதா..? ஹைகோர்ட் நறுக் கேள்வி

அன்றைக்கு அவர் சொன்னதை போன்றே இப்போது 2023-இல் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இதனை அன்றே கணித்தார் மோடி என்ற ரீதியில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.