இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானை ரசிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அவரின் இசைக்காக அனைவரும் அவருக்கு ரசிகர்களாக இருந்தாலும் அவரின் குணத்திற்காகவே அவரை பலர் நேசித்து வருகின்றனர். எவ்வளவு உயரத்திற்கு போனாலும் எந்த அலட்டலும் இல்லாது இருந்து வரும் ஏ.ஆர் ரஹ்மானை யாருக்கு தான் பிடிக்காமல் போகும்.
அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளாக திரையுலகில் செம பிசியாக வலம் வரும் ரஹ்மான் அவ்வப்போது ஊடகங்களுக்கு ஒரு சில பேட்டிகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ.ஆர் ரஹ்மான் தான் மதம் மாறியதை பற்றி பேசியுள்ளார். அந்த விஷயம் தான் தற்போது வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.
மதம் மாறியபோது
ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர் ரஹ்மான் இசையில் புது விதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு தந்தார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர் ரஹ்மான் பாலிவுட் படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்தார். இவரின் வித்யாசமான இசையில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் வெகுவாக ஈர்க்கப்பட்டனர்.
Jawan: ஜவான் படத்தில் நடிக்க நயன்தாராவிற்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன்..ஓகே சொன்ன நயன்..!
இதையடுத்து இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினார் ஏ.ஆர் ரஹ்மான். இதையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு இரு ஆஸ்கார் விருதுகளை வாங்கி ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமைப்பட செய்தார். இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் சமீபகாலமாக தமிழில் அதிக படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
பொன்னியின் செல்வன், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, மாமன்னன் உட்பட பல படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து வரும் ரஹ்மான் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் மதம் மாறியதை பற்றி பேசியுள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் பேச்சு
அவர் கூறியதாவது, நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியபோது எந்த வித சமூகம் சார்ந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை. இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அனைவரும் அரவணைத்து வாழும் தன்மை உடையவர்கள். மேலும் அவர்களுக்கு பரந்த மனப்பான்மையும் உண்டு.
வாழு..வாழவிடு என்பதை வலியுறுத்தியே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அவர்களின் மனசு ரொம்பவே பெருசு என தென்னிந்திய மக்களை புகழ்ந்து பேசினார். மேலும் அரசியல் சூழல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் வித்யாசமான சூழல் இருப்பதாய் நான் உணர்கின்றேன் என ஏ.ஆர் ரஹ்மான் பேசியுள்ளார். தற்போது இவர் பேசிய விஷயம் தான் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.