மதராசபட்டினம் என்ற ஒரு காதல் காவியத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தவர் நடிகை எமி ஜாக்சன். ஒரு சில படங்களிலேயே தனது திறமையான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இவர் தற்போது நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் அத்தியாயம் 1’ என்ற படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
எமி ஜாக்சன், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவைக் காதலித்து வருவதாகச் செய்திகள் கசிந்தன. பின்னர், அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. இவர்கள் அன்பின் அடையாளமாய் எமிக்கு 2019யில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் சூட்டினர். அனைவரும் எமி மற்றும் ஜார்ஜ் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நெரத்தில் இருவரும் மனஸ்தாபத்தால் பிரிந்து விட்டனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/6402e2f0c46bd.jpg)
இப்போது எமி, பிரபல ஹாலிவுட் நடிகர் ஆன எட் வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து வருவதாகத் தகவல் பரவி வருகிறது. இருவரும் ஜோடியாகப் புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவு செய்த வண்ணமிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்போது இருவரும் ஜோடியாக ஜெய்ப்பூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களைச் சுற்றுபார்த்து வருகின்றனர். இந்நிலையில் திருமணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ள எமி ஜாக்சன், “இப்போது இருவரும் நல்ல புரிதலுடன் இருக்கிறோம். எட் வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் கலந்துவிட்டார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளோம். சமீப நாட்களாக இந்தியவுக்கும் – இங்கிலாந்துக்கும் பறந்து கொண்டிருக்கிறேன். நான் நடித்துக்கொண்டிருக்கும் தமிழ்ப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. என் மகன் ஆண்ட்ரியாஸ் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே படப்பிடிப்புக்கு உடன் அழைத்துச் செல்கிறேன். நான் எப்படி நடிக்கிறேன் என்பதை அவன் பார்க்க வேண்டும். நான் அவனுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்” என்றார்.