Jailer: ஜெயிலர் ரிசல்ட் ஃபீவர்… தனியாக இமயமலை செல்லும் ரஜினி… தலைவர் கிரேட் எஸ்கேப்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் போது சென்னையில் இருக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளாராம்.

அதன்படி அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு இமயமலை செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமயமலை செல்லும் ரஜினி: ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவும் ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம் ஜெயிலர் படத்தின் கதையும் நேற்று லீக்கானது. அதன்படி, கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் அப்டேட் வெர்ஷனாக ஜெயிலர் இருக்கும் என சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் மிகப் பெரிய ஸ்டார் வேல்யூ உள்ளது. ஆனால், கடைசியாக அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும் ரஜினியின் படங்களுக்கு ரொம்பவே தடுமாற்றம் காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து மேலும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார் ரஜினி. அதனால் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் அதிகம் கவனிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஜெயிலர் ரிலீஸாகும் நேரம் சென்னையில் இருந்தால் அது மனதுக்கு அமைதியாக இருக்காது என முடிவெடுத்துள்ளாராம். அதனால் வழக்கம்போல 7 நாட்கள் இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளாரம். அதன்படி ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் இருந்து இமயமலைக்கு செல்கிறாரம். ஆகஸ்ட் 6 முதல் 13ம் தேதி வரை இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத், பாபஜி குகை உட்பட பல இடங்களுக்கு செல்கிறாராம்.

அதேபோல் எப்போதும் தனது மகள்கள் ஒருவரை கூட்டிச் செல்லும் ரஜினி, இப்போது தனியாகவே செல்வது குறிப்பிடத்தக்கது. காலா, 2.O படங்கள் ரிலீஸாகும் போதும் இமயமலை சென்றிருந்தார். அதன் பின்னர் கொரோனா காரணமாக சில ஆண்டுகளாக இமயமலை செல்லாத ரஜினி, இப்போது ஜெயிலர் ரிலீஸாகவுள்ள நேரம் அங்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

இமயமலை செல்லும் முன்னரே ஜெயிலர் படத்தை ரஜினி பார்த்து விட்டு தனது கருத்தை ரஜினி தெரிவிப்பார் என படக்குழுவினர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். ஆக மொத்தம் ஜெயிலர் வெளியாகும் போது ரஜினி சென்னையில் இருக்க மாட்டார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.