வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நிலவில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், நிலவில் தரையிறங்கி பிறகு அங்கிருந்து பூமியை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் வைரலாகின.
நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 5வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பூமியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்றப்பட இருக்கிறது. பின்னர் நிலவின் சுற்றுப்பாதையில் படிப்படியாக முன்னேறி, ஆகஸ்ட் 23 அல்லது 24ம் தேதி இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய பின்னர் நிலவில் இருந்து பார்த்தால் பூமி எப்படி தெரியும் என்பது குறித்து ‘வியான்’ (WION) இணையதளம் ‘ஏ.ஐ’ என சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாக புகைப்படமாக வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement