கடலூர் இன்று மாலை 6 மணிக்குப் பிறகு கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது பாமக. என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். . இதைத் தொடர்ந்து அங்குக் கலவரம் ஏற்பட்டது. அதில் பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதால்,காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் […]