டுள்ளது. ‘ப்ளூம்பெர்க்’ நடத்திய சமீபத்திய தேடலில் இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது. அதாவது அமெரிக்காவை சேர்ந்த Valisure LLC எனும் ஆய்வு நிறுவனம் லாப நோக்கமின்றி இதுபோன்ற மருந்துகளை பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இப்படி சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த இருமல் சிரப் ஒன்றை ஆய்வு செய்தபோதுதான் அதில் ‘எத்திலீன் கிளைகோல்’ அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கலந்திருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வறிக்கையைதான் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. மட்டுமல்லது ப்ளூம்பெர்க் இந்த அறிக்கையை உலக சுகாதார நிறுவனத்திடமும், ஈராக் மற்றும் இந்திய அதிகாரிகளிடமும் பகிர்ந்துக்கொண்டுள்ளது. இந்த சிரப்-ஐ சென்னையை சேர்ந்த Fourrts (India) Pvt Ltd எனும் நிறுவனம்தான் தயாரிக்கிறது.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் எத்திலீன் கிளைகோல் கலந்த மருந்தை இறக்குமதி செய்வது குறித்து ஈராக் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மீடியாக்கள் கேட்டபோது பதில் ஏதும் கூறவில்லை. உலக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி இதுபோன்ற இருமல் சிரப்களில் எத்திலீன் கிளைகோல் வெறும் 0.1 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும். இதை விட அதிகமாக கலந்தால் அது மருந்தை நச்சாக்கிவிடும்.
ஆனால் தற்போது Fourrts (India) Pvt Ltd நிறுவனத்தின் சிரப்பில் 2.1 சதவிகிதம் இது கலக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை இது போன்று எத்திலீன் கிளைகோல் அதிக அளவில் இருக்கும் மருந்துகளை உட்கொண்டதால் இந்தோனேஷியா தொடங்கி லைபிரியா வரை 5 நாடுகளை சேர்ந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.