சென்னை: நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.
இந்தப் படத்தை தொடாந்து சூர்யா43 படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் சூர்யா இணையவுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கவுள்ளது.
அடுத்த ஆண்டில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடி தெலுங்குப்படத்தில் நடிக்கும் சூர்யா?: நடிகர் சூர்யா, சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் இணைந்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்களுக்கு இந்த கிளிம்ப்ஸ் வீடியோ அமைந்தது. மிரட்டலான வகையில் அமைந்திருந்த இந்த வீடியோ ஏராளமான வியூஸ்களை பெற்றுள்ளது. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ் மற்றும் பாலிவுட் ஹீரோ பாபி தியோல் ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகின்றனர். இதில் நட்ராஜ் போர்ஷன்களின் சூட்டிங் நடந்துவரும் நிலையில் அடுத்த வாரத்தில் பாபி தியோல் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தில் சூர்யாவிற்கு திஷா பட்டானி ஜோடியாகியுள்ளார். இவர்கள் இருவரின் காம்பினேஷன் காட்சிகள் கோவால் படமாக்கப்பட்டுள்ளன. 1500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. டிஎஸ்பி இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவிலும் இதை பார்க்க முடிந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய சூர்யா43 படத்திற்காக சுதா கொங்கராவுடன் இணையவுள்ளார் சூர்யா என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்தப் படம் அவரது இசையமைப்பில் வெளியாகவுள்ள 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே நடிகர் சூர்யா விரைவில் நேரடி தெலுங்குப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி சமீபத்தில் சூர்யாவை அகாண்டா மற்றும் கார்த்திகேயா 22 படங்களின் இயக்குநர்கள் சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் யாரை தன்னுடைய படத்தின் இயக்குநராக சூர்யா தேர்ந்தெடுப்பார் என்பதும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது. இதனிடையே அடுத்ததாக சுதா கொங்கரா படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தெலுங்குப்படத்தில் எப்போது நடிப்பார் என்பதும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.