பாலக்காடு : பாலக்காடு அருகே, கராலில் அடைக்கப்பட்ட காட்டு யானையை விடுவிக்க வேண்டும் என, நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தோணியில் சில மாதங்களுக்கு முன் மக்களை அச்சுறுத்திய காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வன அலுவலக வளாகத்தில் கராலில் அடைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
யானையை பிடித்தது முதல் கராலில் அடைத்து பராமரிப்பதில் வரையில், வனத்துறையின் நடவடிக்கைகளில் விதிமீறல்கள் உள்ளதை சுட்டிக் காட்டி, யானையை விடுவிக்க வேண்டும் என, வனஆர்வலர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
பரிசீலனை செய்த நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, ஓய்வுபெற்ற கேரள வன ஆராய்ச்சி நிறுவன அதிகாரி ஈசா தலைமையிலான நிபுணர் குழு, காட்டு யானையை விடுவிக்க வேண்டும் என, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
அறிக்கையில் கூறியிருப்பதாவது: யானையை பிடித்தது முதல், கராலில் அடைத்தது வரையிலான நடவடிக்கைகளில், விதிமீறல் உள்ளன. இந்த யானையை கும்கி யானையாக மாற்றக்கூடாது. யானையை பிடிக்கும் போது வனத்துறையினர் வேறு வழிகள் குறித்து ஆலோசனை செய்யவில்லை. இது, சட்டவிரோதமானது.
கூண்டில் அடைக்கப்பட்ட பின், யானையை என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க தாமதம் காட்டியுள்ளனர். தற்போது, யானைக்கு இடது பக்க கண் பார்வையில்றWW குறைபாடுள்ளது. அதற்கு சிகிச்சையளித்து குணமடைந்ததும், கராலில் இருந்து விடுவிக்க வேண்டும். இந்த யானைக்கு நிகழ்ந்த விதிமீறல்கள், வேறு எந்த யானைக்கும் நிகழக் கூடாது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement