நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் உள்ளிட்ட பலரின் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர விருக்கிறது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘ஜெயிலர்’ திரைப்படதின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் இயக்குனர் நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்தின் சகோதரர் பங்கேற்றுள்ளனர். மேலும், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், ரெடின் கிங்ஸ்லி, அனிருத், விக்னேஷ் சிவன், அருண் ராஜா காமராஜ், சூப்பர் சுப்பு எனப் படக்குழுவினர் பலரும் பங்கேற்றுள்ளனர்.
`ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் குறித்து நடிகர் ஜாக்கி ஷெராப், “தலைவர் ரஜினிகாந்த் என்னோட ஆத்மார்த்தமான நண்பர். அவர் என்னோட தம்பி மாதிரி. என்னோட கல்யாணத்துக்கெல்லாம் நேர்ல வந்துருந்தாரு. Always Love You!.” என பேசினார். இதனையடுத்து மேடையேறிய சிவராஜ் குமார், ” நான், பிறந்து வளர்ந்து படிச்சது எல்லாமே சென்னைலதான். அதனாலயே சென்னையை ரொம்பப் பிடிக்கும். எங்க அப்பாகூட ஒரு நாள் சபரிமலைக்கு போனப்போ, சின்னப்பையனா நான் ரஜினி சார் கையைப் பிடிச்சிட்டுதான் போனேன். அப்போ காட்டுன அதே அன்பை அவர் இப்போவும் காட்டுறாரு. அவர் என்னோட சித்தப்பா மாதிரினு சொன்னாலும் தப்பா இருக்காது.”
“தமிழ் சினிமால நிறைய பேரை எனக்குப் பிடிக்கும். பீஸ்ட் ஷூட் அப்போதான் நெல்சன் என்னைக் கூப்பிட்டார். அப்போ விஜய் சாரை சந்திச்சேன். அதேமாதிரி தனுஷுக்கும் நான் பெரிய ரசிகன்.” எனப் பேசி விடைபெற்றார்.