Ather Grid – நிமிடத்திற்கு 1 ரூபாய் + ஜிஎஸ்டி ஏதெர் கிரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் கட்டணம்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின், மிக வேகமான சார்ஜிங் வசதி கொண்ட ஏதெர் கிரிட் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நிமிடத்திற்கு 1 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்பொழுது வரை இந்த சேவையை ஏதெர் இலவசமாக வழங்கி வந்தது.

மிக விரைவான கிரீட் சேவையை 2018 ஆம் ஆண்டு முதல் நெட்வொர்க்கை இலவசமாக அணுக வைத்துள்ளது. இருப்பினும், இப்போது இலவச சார்ஜிங் வசதியினை நீக்குவதாக அறிவித்துள்ளது.

Ather Grid

பயணத்தின்போது விரைவான சார்ஜிங் செய்யும் போது ஏதர் கிரிட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது. கட்டணச் சார்ஜிங் ஆனது உரிமையாளர்கள் தேவைக்கு ஏற்ப காலத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிப்பதை உறுதிசெய்துள்ளது. அவசர தேவைகளுக்கு ஏற்ப சார்ஜரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

0-80 % வரை ஏதெர் 450x ஸ்கூட்டரை விரைவான சார்ஜைரை பயன்படுத்தினால் 100 நிமிடங்களுக்கு மேல் தேவைப்படும்.  ரூ.100 கட்டணம் உடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதே ஸ்கூட்டரை வீட்டில் சார்ஜர் செய்ய 5 மணி 40 நிமிடங்களுக்கு தேவைப்படும் நிலையில் ரூ.25 வரை மின் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

எனவே, ஏதெர் கிரிட் என்பது அவசர தேவைக்கு மட்டும் விரைவான சார்ஜரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமீபத்தில் ஏதெர் எனர்ஜி நிறுவனம் பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் 21,000 இடங்களில் ஏதெர் கிரிட் சார்ஜிங் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

தற்பொழுது, 100க்கு மேற்பட்ட நகரங்களில் 1400 சார்ஜிங் நிலையங்களை ஏதெர் கொண்டுள்ளது. குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை ஏதெர் கொண்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஏதெர் நிறுவனம் 450 எஸ் என்ற குறைந்த விலை ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.