Jailer Audio Launch: சும்மா.. சாமி வந்து ஆடிய அனிருத்.. அள்ளி அணைத்து முத்தம் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில், அதன் தாக்கம் ஆகஸ்ட் 10 படம் வெளியாகும் வரை இருக்கும் என்றே தெரிகிறது.

அதிலும், விழா நாயகனான அனிருத் சாமி வந்து ஆடியது போல கிளப்பிய அலப்பறை நடனம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜெயிலர் படத்துக்காக ஹுகும் மற்றும் ஜுஜுபி என இரண்டு தரமான சம்பவங்களை அனிருத் செய்துள்ள நிலையில், அவரை மேடையில் பார்த்த ரஜினிகாந்த் உடனே அள்ளி அணைத்து முத்தம் கொடுத்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

சாமியாட்டம் ஆடிய அனிருத்: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராக்ஸ்டார் அனிருத் தனது இசை கச்சேரிகளில் ரசிகர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டதை விட 100 மடங்கு அதிக எனர்ஜியில் சும்மா சாமி வந்தது போல ஆட்டம் போட்டதை பார்த்த ரசிகர்கள் ஆடிப் போய் விட்டனர்.

நா ரெடி பாடலுக்கு பிறகு அனிருத்தை அணில்ருத் என்றே ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்த நிலையில், நான் எப்போதுமே முதல்ல தலைவர் ஃபேன் தான் என தனது வெறித்தனமான ஆட்டத்தால் அரங்கை அதிர செய்தார்.

Rajinikanth kisses Anirudh at Jailer Audio Launch

பாடல்கள் மூலம் தரமான சம்பவம்: ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடலே களைகட்டி இன்ஸ்டாகிராம், யூடியூப் என மிகப்பெரிய டிரெண்டான நிலையில், ஹுகும் மற்றும் ஜுஜுபி பாடல்கள் வெளியாகி சூப்பர்ஸ்டார் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தியேட்டருக்கு கொண்டு வரும் வித்தையை செய்துள்ளது.

இந்நிலையில், தனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியான ஃபயரான பாடல்களையும் ஹேட்டர்களுக்கு சரியான சவுக்கடியையும் கொடுத்த அனிருத்தை மேடையில் பார்த்த உடனே பாராட்டி விட்டார் ரஜினிகாந்த்.

அள்ளி அணைத்து முத்தம்: ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மனைவி லதா ரஜினிகாந்த் உடன் வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சனை பார்த்ததும் கட்டிப் பிடித்து வாழ்த்தினார்.

அதன் பின்னர் ராக்ஸ்டார் அனிருத்தை பார்த்த உடனே கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து தனது ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.