Jailer audio launch: பீஸ்ட் படத்தால் ஏற்பட்ட நெகடிவிட்டி..தலைவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை..ஓபனாக பேசிய நெல்சன்..!

தற்போது ஜெயிலர் படத்தை பற்றி தான் அனைவரும் பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இதன் காரணமாக இப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவாகியுள்ளது.

ரஜினியின் நம்பிக்கை

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகின்றது. அந்த வகையில் நேற்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. ரஜினியின் படத்திற்கு இசை வெளியீட்டு விழா பல வருடங்களுக்கு பிறகு நடப்பதால் ரஜினி இவ்விழாவில் என்ன பேசப்போகின்றார் என்ற ஆவலில் ரசிகர்கள் இருந்தனர்.

Jailer: போய் சொல்லுயா..நல்லா இருக்கும்..தளபதி கொடுத்த நம்பிக்கை..உருக்கமாக பேசிய நெல்சன்..!

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரஜினியின் பேச்சு இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இவ்விழாவில் பேசிய நெல்சன் பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார். அவர் பேசியதாவது, ஜெயிலர் படவாய்ப்பு கிடைத்ததற்கு பிறகு தான் நான் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வெளியானது.

பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. கவலையான விமர்சனங்களையே பெற்றது. அதன் காரணமாக நான் நெகட்டிவிட்டியில் இருந்தேன். மேலும் ஜெயிலர் படவாய்ப்பு என்னைவிட்டு பறிபோகும் என்ற பயத்திலும் இருந்தேன். அப்போது ரஜினியிடம் சென்று நான், சார் உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் மட்டும் ஜெயிலர் வாய்ப்பை எனக்கு தாருங்கள் என்றேன்.

நெல்சன் உருக்கம்

அதற்கு ரஜினி, எனக்கு உங்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கின்றது என்றார். மேலும் தயாரிப்பு நிறுவனத்திடமும் நெல்சனின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது என கூறினார். இந்த ஒரு வார்த்தை தான் எனக்கு புது உத்வேகத்தை தந்தது என பேசினார் நெல்சன். இந்நிலையில் ஜெயிலர் படத்தை பற்றி கோலிவுட் வட்டாரத்தில் பாசிட்டிவான டாக் இருந்து வருகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஜெயிலர் படத்தை பார்த்த ரஜினிக்கு படத்தின் மீது முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற நம்பிக்கையில் ரஜினி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

எனவே ஜெயிலர் திரைப்படம் ரஜினி மற்றும் நெல்சன் இருவரையும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.