மின்சக்தி மற்றும் எரி சக்தி துறையுடன் சம்பந்தமாக கடந்த இந்திய சுற்றுலாவின் போது கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இந்திய அரசாங்கம் மற்றும் தனியார் முதலீட்டாளர்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மின்சார சபை, சூரிய எரி சக்தி அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.