சென்னை: FFT வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் படத்தின் கதை இதுதான் என்று மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் அவரை பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய யூடியூபரான டிடிஎப் வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இவர் நடிக்கும் முதல் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார்.
மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வாசனின் பிறந்த நாள் அன்று வெளியானது.
மஞ்சள் வீரன்: FFT வாசன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று தெரிந்ததுமே இணையவாசிகள் அவரை வெச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், மஞ்சள் வீரன் படத்தின் கதை இது தான் என்று மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அப்படி என்ன கதை சொல்லி இருக்காங்க தெரியுமா?
மஞ்சள் வீரன் படத்தின் கதை: வாசன் உணவு டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். அவருக்கு எந்த ஆர்டர் வந்தாலும், வாகனத்தை மெதுவாக ஓட்டுவதால், தாமதமாக டெலிவரி செய்கிறார். அனைத்து ஆர்டர்களையும் தாமதமாக டெலிவரி செய்வதால், இவர் மீது வாடிக்கையாளர்கள் பலர் புகார் கூறுகிறார்கள். இதனால், வாசனின் வேலை போய்விடுகிறது.
பிளாஷ் பேக் ஸ்டோரி: இந்த நேரத்தில் தான் நாள் ஒரு காலத்தில் எப்படி இருந்தேன் என்று பிளாஷ் பேக்கில் கதை செல்கிறது. அப்போது, வாசன் வெறும் வாசன் இல்ல FFT வாசன் இவர் பைக்கில் படுவேகமாக போய் இவர் மீது பல வழக்குகள் இருக்கிறது. இந்த நேரத்தில் தனது காதலியான அமலா ஷாஜியுடன் பைக் ரைடு செல்கிறார்.
கிண்டலடிக்கும் பேன்ஸ்: அப்போது, வேகமாக பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நாய் குறுக்கே வந்து விபத்து ஏற்பட அன்றிருந்து FFT வாசனாக இருந்தவர் வெறும் வாசனாக மாறி புட் டெலிவரி வேலையில் சேருகிறார். இதை தெரிந்து கொண்ட வில்லன் வாசனை ரைடுக்கு வருமாறு வம்புக்கு இழுத்து காதலியின் தங்கையை கடத்திச் சென்று விடுகிறார். கடைசியில் காதலியின் தங்கையை எப்படி மீட்டார் என்பதுதான் படத்தின் கதை. இதை மீம்ஸ்காக வைத்து வீடியோ வெளியிட்டு வாசனை பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.