வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் புதிய பிக்கப் டிரக் மாடலை மஹிந்திரா & மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. அனேகமாக, இந்த பிக்கப் டிரக் எலக்ட்ரிக் மாடலாக இருக்கலாம் அல்லது மிகவும் பிரீமியம் வசதிகளை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே, மஹிந்திரா நிறுவனம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த ஆண்டு இலகு ரக ஓஜா டிராக்டர் மற்றும் பிக்கப் டிரக் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Mahindra Pikup
மஹிந்திரா தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ள டீசர் மூலம் பிக்கப் டிரக் எ உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த டிரக் மாடல் எலக்ட்ரிக் ஆகவோ அல்லது டீசல் என்ஜின் பெற்றதாக வருமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம், சுதந்திரமான அனுபவத்தை பெற. எல்லைகளை தகர்த்தெறிய. எங்களின் புதிய சர்வதேச அளவிலான பிக் அப் டிரக் வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. #Futurescape #GoGlobal என இரு ஹேச்டேக் ஆனது வழங்கியுள்ளது.
மேலும் இந்த டீசர் மூலம் பிக்கப் டிரக்கின் டயர், எல்இடி டெயில் லைட் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை பெறுவது உறுதியாகியுள்ளது. முழுமையான விபரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவரும். இதே நாளில் புதிய ஓஜா டிராக்டரை மஹிந்திரா ஆறிமுகம் செய்ய உள்ளது.