சென்னை: உச்ச நடிகர் படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆனாலே பொதுவாக தனது காரில் போட்டு கேட்டுக் கொண்டே செல்லும் மாஸ் நடிகர் இந்த முறை வந்த அந்த இரு பாடல்களால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற அந்த திரைப்பட விழாவில் நடந்த விஷயங்கள் எல்லாம் அவரது காதுகளுக்கு சென்ற நிலையில், இதெல்லாம் பிசினஸில் சகஜம் என்றே கடந்து சென்ற நடிகருக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாக உச்ச நடிகர் படத்தின் பிசினஸ் குறித்த அப்டேட்கள் தான் டென்ஷன் ஆக்கி விட்டதாம்.
கிட்டத்தட்ட 700 கோடி அளவுக்கு இந்த படத்தின் பிசினஸ் இருக்கும் என வெளியான தகவல்கள் தான் மாஸ் நடிகரின் தூக்கத்தை டோட்டலாக கலைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நம்பர் ஒன் கனவோடு: கடந்த ஆண்டு பாஸ் நடிகர் பாக்ஸ் ஆபிஸில் செய்த பெரிய சம்பவத்தால், மாஸ் நடிகர் பின்னுக்குத் தள்ளப்பட்டார். இந்த ஆண்டு வெளியான படமும் பெரிதாக போகாத நிலையில், தனக்கு ஆப்படித்த இயக்குநரையும், வில்லனையும் வைத்தே இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திட வேண்டும் என்கிற வெறியுடன் உழைத்து வருகிறார் மாஸ் நடிகர்.
அந்த பிரம்மாண்ட படத்தின் 2ம் பாகமும் மாஸ் நடிகர் படத்தின் வசூலை முந்தாத நிலையில், இந்த ஆண்டு நாம தான் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் கிங் என 500 கோடி வரை கணக்கு போட்டு வைத்திருந்திருக்கிறார் மாஸ் நடிகர்.
700 கோடி பிசினஸ்: ஆனால், திடீரென உச்ச நடிகர் மீண்டும் சர்வதேச அளவில் தனது ரசிகர்களை வைத்து சம்பவம் செய்ய பக்கா பிளான் போட்டு மீண்டும் ஒரு பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை படைக்க திட்டம் தீட்டியுள்ளாராம்.
சுமார் 700 கோடி வரை பிசினஸ் நடக்கும் என்கிற தகவல்கள் தற்போது மாஸ் நடிகரின் காதுகளுக்கு சென்ற நிலையில், மனுஷன் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.
1000 கோடிக்கு திட்டம்: இந்த முறை விட்டால், அடுத்த படத்தில் எல்லாம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை செய்ய வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மாஸ் நடிகர் எப்படியாவது தனது படத்தின் பிசினஸை அதிகபட்சமாக 1000 கோடி வரை உச்சத்துக்கு கொண்டு செல்லும் வேலையை தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இன்னும் ஒரு சில மாதங்களில் பாக்ஸ் ஆபிஸில் ரியல் கிங் யார் என்பது தெரிந்து விடும் என்றும் அதன் பின்னர் இந்த அலப்பறை எல்லாம் அடங்கி விடும் என்றும் தனது ஆட்களுக்கு சொல்லி அமைதிப்படுத்தி விட்டார் மாஸ் நடிகர் என்றும் கூறுகின்றனர்.