Jailer Audio Launch: காக்கா, கழுகை வைத்து ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி: தரமான பதிலடி.!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ லான்ச் வெகு விமர்சையாக நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினர், கன்னட சினிமா பிரபலம் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

நேற்று நடந்த ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் ஆக்கரமித்துள்ளன. இந்த இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். ஏனென்றால் வழக்கமாக இந்த மாதிரியான ஆடியோ லான்ச்சில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறித்தனமான ஸ்பீச் ஒன்று கொடுப்பார். அவரின் அந்த பேச்சை கேட்க தான் ரசிகர்கள் கூட்டம் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படி நேற்றைய தினம் ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச்சில் மாஸான ஸ்பீச் ஒன்றை கொடுத்துள்ளார். அதே போல் குட்டிக்கதை ஒன்றையும் சொல்லியுள்ளார். அது என்னவென்றால், காட்டுல பெரிய மிருகங்களை எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். உதாரணத்துக்கு காகம் எப்பவும் கழுகை சீண்டிக்கிட்டே இருக்கும்.

ஆனா, கழுகு எப்பவும் அமைதியாவே இதுக்கும். கழுகு பறக்கும் போது அதை பார்த்து காக்காவும் உயரமா பறக்க நினைக்கும். ஆனா காக்காவால அது முடியாது. கழுகு இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துக்கு பறந்து போயிட்டே இருக்கும். உலகின் உன்னதமான மொழி மெளனம் தான். நான் காக்கா கழுகுன்னு சொன்ன உடனே, இவரை தான் சொல்றேன்னு சோஷியல் மீடியால சொல்லுவாங்க.

Jailer: ‘ஜெயிலர்’ படத்தின் கதை.. ஹிண்ட் கொடுத்த விக்னேஷ் சிவன்: மாஸா இருக்கே.!

இங்க குலைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலையை பார்த்துட்டு நேரா போயிட்டே இருக்கணும் என அனல் பறக்க பேசியுள்ளார் ரஜினி. ஹுக்கும், ஜுஜுபி பாடல்கள் விஜய்யை குறி வைத்து தான் வெளியாகியுள்ளது என சோஷியல் மீடியாக்களில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி பேசியுள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரஜினி நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியாகியிருந்த நிலையில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட கேப்பிற்கு பிறகு ‘ஜெயிலர்’ படம் வெளியாகயிருக்கிறது. பல மொழிகளை சார்ந்த பிரபலங்களுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் ஆக்ஷன் ஜானரில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் மாஸ் என்ட்ரி.. அரங்கை அதிர வைத்த ரசிகர்கள்: ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச் அப்டேட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.