கலாம் புத்தகத்தை வெளியிட்ட அமித் ஷா | திமுக இளைஞரணி அறிமுக கூட்டத்தில் ஸ்டாலின் – News In Photos July 29, 2023 by விகடன் சென்னை: திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு இராமேஸ்வரம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலாமின் நினைவுகள் அழிவதில்லை என்ற புத்தகத்தை வெளியிட்டார். புதுச்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக பேசிய ஐ.லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி-யிடம் அதிமுகவினர் புகாரளித்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ள 15 காவல் நிலையங்களுக்கான ISO 9001: 2015 தர சான்றிதழ்களை வழங்கினார் இராமேஸ்வரம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மீனவr ஒரிவருன் வீட்டுக்குச் சென்று அவரின் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு சொந்த வீடு கட்டி தருவதாக உறுதி அளித்து வந்தார். ஈரோட்டில் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது கன்னியாகுமரி கேரம் சங்கம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவிலில் நடைபெற்றது. இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவன இடங்களில் தியாகப் பெருஞ்சுவர் அமைப்பது தொடர்பாக கவர்னர் ஆர்.என் ரவியை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சந்தித்து பேசினார். நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபாராசக்தி சித்தர் சக்தி பீடம் கோயிலில் ஆடி மாத சிறப்பையொட்டி மலர் அலங்காரத்தில் அருள் பாலிக்கும் அம்மன். புதுச்சேரி: தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்பட்டு மூன்றாம் ஆண்டு விழா மலரை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி வெளியிட்டனர் கன்னியாகுமரி முக்கடல் அணை சிறுவர் அறிவியல் பூங்கா பராமரிப்பின்றி பழுதடைந்து, புதர் மண்டி காணப்படுகின்றது. ஈரோட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு 26 சதவீதம் கூலி உயர்வு… அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு. வேலூா்: மொகரத்தையொட்டி மார்பில் அடித்துக் கொண்டு ஊர்வலமாக செல்லும் இஸ்லாமிய இளைஞர்கள். விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முகாமினை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார் சென்னை: திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கடலூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நீலகிரி: காந்தள் அம்பேத்கர் தெரு பொதுமக்கள் பொது கழிப்பறையை சீரமைத்து தரக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டு, போலீஸாருடன் வாக்குவாதம் செய்த நிலையில் சுகாதார ஆய்வாளர் ஓரிரு மாதங்களில் சீரமைத்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததும் கலைந்துச் சென்றனர். புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாகீரப்பாளையம் மயானக் கொள்ளை நடைபெறும் கோவில் இடம் பிரச்னை தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை திமுக எம்.எல்.ஏ அனிபால் கென்னடி சந்தித்து மனு அளித்தார். புதுச்சேரியில் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையை கேட்ட மாணவர்கள் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகில் தங்களுக்கென்று தனி பால் சொசைட்டி அமைத்து தர கோரி கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் தென்னை விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினர். திண்டுக்கல் மாணவி அனுஷியா பிரியதர்ஷினி இந்திய பல்கலைக் கழக டேக்வோண்டோ அணியில் 62 கிலோ எடை பிரிவில் தேர்வு செய்யப்பட்டு சீனாவில் நடைபெறும் உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று உள்ளார் புதுச்சேரி; ஆசிய ஹாக்கி கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். Source link