Jailer audio launch: ஜெயிலர் படத்தில் என் நண்பரை தான் வில்லனாக நடிக்க கேட்டோம்..ஆனால் ? ரஜினி சொன்ன அந்த நண்பர் இவரா ?

ரஜினியின் ஜெயிலர் படத்தை பற்றிய பேச்சு தான் தற்போது எங்கு திரும்பினாலும் இருக்கின்றது. மெல்ல மெல்ல படத்திற்கு ஹைப்பை ஏற்றி இன்று இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு படமாக ஜெயிலர் உருவெடுத்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் படக்குழு பிளான் போட்டு செய்துள்ளனர்.

ஏனென்றால் இது நெல்சனுக்கு மட்டுமல்ல ரஜினிக்கும் மிக முக்கியமான ஒரு படமாகும். சமீபகாலமாக தொடர் தோல்வியில் இருந்து வர ஜெயிலர் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப காத்துக்கொண்டிருக்கிறார். அதே போல தான் பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சனும் வெற்றுப்பாதைக்கு திரும்ப உழைத்து வருகின்றார்.

முக்கிய வில்லனாக என் நண்பர்

இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. இதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கியுள்ளது. அந்த வகையில் ஜெயிலர் படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியான நிலையில் நேற்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

Jailer audio launch: ரஜினியிடம் அவரின் முதல் காதல் பற்றி கேட்ட நெல்சன்..தலைவர் சொன்ன விஷயம்..இது என்ன புதுசா இருக்கு..!

இவ்விழாவில் ரஜினி, நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோர் மேடையில் ஏறி பல விஷயங்களை பரிமாறிக்கொண்டனர். அதிலும் குறிப்பாக ரஜினி பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகின்றது.

அந்த வகையில் ரஜினி ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க தன் நண்பர் ஒருவரை அணுகியதாக கூறிய விஷயம் தான் தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது ஜெயிலர் படத்தில் மெயின் வில்லன் கதாபாத்திரத்தில் என் நண்பர் ஒருவரை வில்லனாக நடிக்கவைக்கலாம் என நினைத்தேன். நெல்சனும் இதற்கு ஓகே சொன்னார்.

உடனே நான் அந்த நண்பருக்கு கால் பண்ணி கேட்டேன். அவர் கண்டிப்பாக நடிக்கின்றேன் என கூறிவிட்டார். ஆனால் இந்த படத்தில் மெயின் வில்லனை நான் அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. எனவே தான் எனக்கு தயக்கமாக இருந்தது. நான் என் நண்பரை, ஒரு முன்னணி ஹீரோவை இவ்வாறு அடித்தால் நன்றாக இருக்குமா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.

ரஜினி சொன்ன செம நியூஸ்

அதன் காரணமாக அந்த முடிவை நாங்கள் கைவிட்டு விட்டோம். அந்த நடிகரும் அதனை புரிந்துகொண்டார் என்றார் ரஜினி. இந்நிலையில் ரஜினி சொன்ன அந்த நண்பர் யார் என ரசிகர்கள் ஆராய துவங்கிவிட்டனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஒருசில ரசிகர்கள் அந்த நண்பர் உலகநாயகன் கமல்ஹாசன் தான் என்கின்றனர். மேலும் ஒரு சிலர் ரஜினி சொல்லும் அந்த நண்பர் மம்மூட்டி தான் என்கின்றனர். இதையடுத்து ரஜினியே சொன்னால் மட்டுமே தான் அந்த நடிகர் யார் என தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.