சென்னை: அமராவதி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான அஜித், இன்று டாப் ஹீரோவாகிவிட்டார்.
எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாத அஜித் ஏராளமான தடைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில், நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் நடித்து வந்த அஜித் திடீரென அதிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித்துக்குப் பதிலாக சூர்யா:கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் அஜித்தும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அமராவதியில் தொடங்கிய அஜித்தின் திரைப் பயணம், இப்போது அவரது 62வது படமான விடாமுயற்சி வரை விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆரம்ப காலங்களில் சப்போர்ட்டே இல்லாமல் பல படங்களில் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டினார்.
1995ம் ஆண்டு வெளியான ஆசை படம் தான் அஜித்துக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. வசந்த் இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆசையை தொடர்ந்து வசந்த் இயக்கிய திரைப்படம் நேருக்கு நேர். இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
![Ajith: The reason is that Suriya replaced Ajith in Nerrukku Ner Ajith: The reason is that Suriya replaced Ajith in Nerrukku Ner](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/screenshot14738-1690626378.jpg)
விஜய் – சூர்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள, செம்ம ஆக்ஷன் படமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் முதலில் அஜித் தான் நடித்துள்ளார். ஆசை படத்தின் மூலம் அஜித்துக்கும் இயக்குநர் வசந்துக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அஜித் தான் வேண்டும் என நேருக்கு நேர் படத்திலும் அவரை கமிட் செய்துள்ளார்.
அதேபோல் ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்யும் அஜித்தும் ஏற்கனவே இணைந்து நடித்திருந்தனர். அதனால், நேருக்கு நேர் படத்தில் இருவரது கெமிஸ்ட்ரியும் பக்காவாக செட் ஆகும் என வசந்தும் மணிரத்னமும் முடிவு செய்திருந்தனர். ஆனால், திடீரென அஜித்துக்குப் பதிலாக சூர்யா கமிட்டானார். அதற்கு காரணம் அஜித்துக்கும் இயக்குநர் வசந்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் என சொல்லப்படுகிறது.
![Ajith: The reason is that Suriya replaced Ajith in Nerrukku Ner Ajith: The reason is that Suriya replaced Ajith in Nerrukku Ner](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/screenshot14739-1690626389.jpg)
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்கும் இடையே எதோ கருத்து மோதல் ஏற்பட, அதனைப் பார்த்த சுஹாசினி அஜித்தை நீக்கிவிடலாம் என மணிரத்னத்திடம் கூறியுள்ளார். அதன் பின்னர், அஜித்துக்குப் பதிலாக பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கால்ஷீட் இல்லாததால் சூர்யாவை நடிக்க வைத்தார் வசந்த். சூர்யாவுக்கு நேருக்கு நேர் தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் ‘நேருக்கு நேர்’ பிரச்சினைக்குப் பின்னர் இயக்குநர் வசந்த் உடன் அஜித் இணையவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.