வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்,-அமெரிக்காவில் சீக்கிய போலீஸ்காரர் ஒருவர் அரை அங்குலம் அதிகமாக தாடி வளர்க்க அந்நாட்டு காவல் துறை அனுமதிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவில் போலீசாரும், ராணுவத்தினர் போல் தோற்றம் தரும் விதத்தில் இருக்கும்படி அந்நாட்டில் சட்டங்கள் இருந்தன. இவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், நாளடைவில் இந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில், இங்கு நியூயார்க்கில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் சரண்ஜோத் டிவானா என்ற சீக்கியர், திருமணத்துக்காக தன் தாடியை அரை அங்குலம் அதிகம் வளர்க்க விரும்பினார்.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்கான அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை, தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டம் கூறுகிறது.
ஆனால் சரண்ஜோத் விவகாரத்தில் இது மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நியூயார்க் நகர போலீசார் நலச் சங்கத் தலைவர் சார்லி மர்பி கூறுகையில், ”காவல் அதிகாரிகள் உட்பட அனைத்து நியூயார்க்வாசிகளும் தங்கள் மத சம்பிரதாயங்களை கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
சீக்கிய மத கோட்பாடுகளின்படி, ஆண்கள் கட்டாயம் தலைப்பாகை அணிய வேண்டும். தங்கள் தலைமுடியையும், தாடியையும் அவர்கள் எடுக்கக்கூடாது.
ஆனால், நியூயார்க் காவல் துறையில் உள்ள ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement