மீரட்:உத்தரப் பிரதேச மாநிலத்தில், 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மீரட் மாநகர பா.ஜ., பொதுச் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தவுராலா நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா கூறியதாவது:
மீரட் நகரில் உள்ள வழக்கறிஞர் ரமேஷ் சந்த் குப்தா அலுவலகத்தில் 17 வயது சிறுமி பணிபுரிந்தார்.
வக்கீல் குப்தா, அவரது உறவினரும், மீரட் மாநகர பா.ஜ., பொதுச் செயலருமான அரவிந்த் குப்தா மார்வாரி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகி சஞ்சீவ் கோயல் சிக்கா ஆகிய மூவரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளனர்.
இதுதொடர்பாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, சிறுமி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஜூன் 16ல் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், குப்தா, அரவிந்த் மற்றும் சிக்கா ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததையும் அதை வீடியோ எடுத்து மிரட்டியதையும் கூறினார். நீதிமன்ற உத்தரவுப்படி மூவர் மீதும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வக்கீல் குப்தா ஜூன் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அரவிந்த் குப்தா மார்வாரிக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம், ஜாமினில் வரமுடியாத பிரிவில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
விரைவில் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். சஞ்சீவ் கோயல் சிக்காவிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement