Fahad Faasil: ஃபஹத் பாசிலால் மாரி செல்வராஜிற்கு வந்த சோதனை..இதை அவர் எதிர்பார்க்கவே இல்லையாம்..!

மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதியின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். கடந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்களின் பெறாதவரை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

மாரி செல்வராஜின் படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது இப்படத்தில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர் ரஹ்மான் இசை, வடிவேலுவின் நடிப்பு என இப்படம் மேலும் மெருகேறியது. அதன் காரணமாகவே இப்படத்திற்கு உச்சகட்டமாக எதிர்பார்ப்பு இருந்தது.

OTT யில் மாமன்னன்

இதைத்தவிர இப்படம் தான்
உதயநிதி
நடிக்கும் கடைசி படம் என்பதாலும் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருந்தனர். அந்த எதிர்பார்ப்பை எல்லாம் மாமன்னன் திரைப்படம் பூர்த்தி செய்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் திரையில் வெளியாகி வசூலை அள்ளிய மாமன்னன் திரைப்படம் தற்போது OTT யில் வெளியாகி மேலும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leo: லியோ படத்தின் அடுத்த அப்டேட் இதுதான்..அப்டேட் வெளியாகும் தேதியையும் அறிவித்த தயாரிப்பாளர்..!

ஆனால் OTT யில் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பு வேறு விதமாக இருந்து வருகின்றது. அதாவது திரையில் மாமன்னன் திரைப்படம் வெளியான போது வடிவேலுவின் கதாபாத்திரத்தையும் ,உதயநிதியின் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் புகழ்ந்தார்கள். ஆனால் தற்போது இப்படம் OTT யில் வெளியான பிறகு ரத்னவேலு என்ற ரோலில் நடித்த ஃபஹத் பாசிலை ரசிகர்கள் கொண்டாடி வருவது தான் அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபஹத் பாசில் நடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை மாஸாக எடிட் செய்து ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். என்னதான் ஃபஹத் பாசிலின் நடிப்பு அபாரமாக இருந்தாலும் மறுபக்கம் ரத்னவேலு கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடுவது சரியல்ல என்பது தான் பலரின் கருத்தாக இருக்கின்றது.

ஃபஹத் பாசிலுக்கு வரவேற்பு

சாதி வேறுபாடு இன்றி அனைவரும் சமம் என சொல்லும் மாமன்னன் மற்றும் அதிவீரனின் கதாபாத்திரத்தை விட்டுவிட்டு ரசிகர்கள் சாதி வெறியோடு திரிந்த ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டாடுவது தவறு என சிலர் பேசி வருகின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் மாரி செல்வராஜ் வடிவேலுவின் மாமன்னன் கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ஃபஹத் பாசில் நடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டாடுவது அவருக்கு பேரதிர்ச்சியாகவே இருக்கின்றதாம். மேலும் இது வெறும் எடிட் செய்வதோடு நின்றுவிட வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாக தற்போது இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.