திருப்பதி: நாடு முழுவதும் தக்காளி உற்பத்தி குறைந்ததால், அதன் விலை ஏறிக்கொண்டே போகிறது. தரமான ஏ கிரேட் தக்காளி தற்போது கிலோ ரூ. 180 முதல் 200 வரை ஆந்திராவில் வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திராவின் மதனபல்லியில் தக்காளி சந்தை மிகவும் பிரபலமானது. இப்பகுதியின் சுற்றுப்புறகிராமங்களில் தக்காளிதான் அதிகமாக பயிரிடப்படுகிறது. இவை தரம் பிரித்து வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இங்கு நேற்று ஏ கிரேடு தக்காளி ஒரு கிலோ ரூ.196-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.