கொரோனா
கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். கோவிட் – 19 என்று குறிப்பிடப்பட்ட இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி இரண்டாம் அலை, மூன்றாம் அலை என அலை அலையாக மிரட்டியது.
மெர்ஸ் கோவி வைரஸ்
இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மெர்ஸ்- கோவி வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த MERS-CoV (Middle East Respiratory Syndrome Coronavirus) வைரஸ் கடந்த 2012ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான ரேஸில் மேலும் ஒரு இந்தியர்… யார் இந்த ஹிர்ஷ் வர்தன் சிங்?
936 பேர் பலி
இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டத்தில் இருந்து, அல்ஜீரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ் உள்ளிட்ட 27 நாடுகளில் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இந்த வைரஸால் இதுவரை 2605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சிகரமாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 936 பேர் மரணமடைந்துள்ளனர்.
28 வயது இளைஞர்
முதலில் இந்த வைரஸ் ஓட்டகங்கள் மற்றும் மனிதர்கள் இடையே பரவுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அபுதாபியை சேர்ந்த அந்த இளைஞருக்கு ஒட்டகங்கள், செம்மறி ஆடுகள் மற்றும் மற்ற விலங்குகளுடன் எந்த தொடர்பும் இல்லை.
மத்திய அரசின் பள்ளி மாணவர்களுக்கான ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க கடைசி தேதி!
உலக சுகாதார அமைப்பு கவலை
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட எந்த நபருடனும் அந்த இளைஞருக்கு தொடர்பு இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த இளைஞர் இந்த ஆபத்தான மெர்ஸ் கோவி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
மனிதகுலத்துக்கு அச்சுறுத்தல்
இந்த வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது என்று இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பது மனிதகுலத்துக்கு அச்சுறுத்தல்தான் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வைரஸ் விரைவாக பரவாமல் இருப்பதால் இது இன்னும் கட்டுக்குள்தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
50 வயதில் கள்ளக்காதல்… கணவரை 5 துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய மனைவி… அதிர வைக்கும் காரணம்!
இரண்டாம் நிலை வழக்குகள்
தொற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு செல்லும் போது – இது இரண்டாம் நிலை வழக்குகள் என குறிப்பிடப்படுகிறது என்றும் ஆனால் மெர்ஸ் கோவி விஷயத்தில் இரண்டாம் நிலை வழக்குகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது நல்ல அறிகுறிதான் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அறிகுறிகள்
இந்த வைரஸ் தொற்று போன்றதுதான் என்றும் ஆனால் கொரோனா வைரஸ் அளவுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவவில்லை என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. Mers-CoV வைரஸ் பாதிப்பு அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை உள்ளதாகவும் நிமோனியா அல்லது சிறுநீரக செயலிழப்பு வரை செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
திருப்பதியில் கூட்டமா? இனி கவலையே வேண்டாம்.. பக்தரின் அசத்தல் காணிக்கை.. ஃபாலோ பண்ணும் தேவஸ்தானம்!
உலக சுகாதார மையம் எச்சரிக்கை
பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும். விலங்குகளை தொடுவதற்கு முன்பும் தொடுவதற்கு பின்பும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் பழகுவதையும் தொடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் நோய்க்கிருமிகளால் ஏற்படும் அபாயத்தை குறைக்க, பால் மற்றும் இறைச்சி போன்றவற்றை பச்சையாகவோ அல்லது சமைக்காமலோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.