வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: தாறுமாறா எகிறிய மவுசு… புது ரயில்கள், புது ரயில் நிறுத்தங்கள் எப்போது?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் வன்முறை சம்பவங்களை ஒட்டி தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மத்திய அரசு தங்கள் திட்டமிட்டபடி முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறது. மேலும் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து வருகின்றனர்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இதில் மக்களுக்கு பயன் தரக்கூடிய விஷயங்களும் இருக்கின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சகத்திடம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடர்பாக 170க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 99.6 சதவீத இருக்கைகள் நிரம்பி விடுகின்றன.

பயணிகள் ஆர்வம் அதிகரிப்பு

இது அந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் மவுசை காட்டுகிறது. கட்டணம் அதிகமாக இருந்தாலும் மற்ற ரயில்களை காட்டிலும் குறைந்த பயண நேரம், சொகுசு வசதிகள் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் புதிய சேவைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஏராளமான கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

குவியும் கோரிக்கைகள்

மேலும் தங்கள் ஊரிலும் ரயில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் சில…

சென்னை டூ மைசூரு வழித்தடம்

ராஜ்தானிக்கு போட்டி

நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் சதாப்தி ரயில்களை ஓரங்கட்டும் அளவிற்கு சென்றுள்ளது. படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்துவிட்டால் ராஜ்தானிகளும் பின்னடைவை சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிதாக 4 ரயில்கள்

தற்போது 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழியாக செல்கின்றன. விரைவில் 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, எந்தெந்த வழித்தடங்களில் ஏசி ரயில்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமுள்ளதோ, அவற்றை கண்டறிய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.