ரோலர் கோஸ்டரில் தலைக்குப்புற… 40 நிமிட திக் திக்… இங்கிலாந்து தீம் பார்க்கில் நடந்த பகீர்!

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு பகுதியில் எஸ்செக்ஸ் கவுண்டி கவுன்சிலில் சவுத் எண்ட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிரம்மாண்ட ரோலர்கோஸ்டர் ஒன்று பயன்பாட்டில் இருந்து வருகிறது. ரோலர்கோஸ்டர் அனுபவம் என்றாலே திரிலுக்கு பஞ்சம் இருக்காது. ஏறி, இறங்கி வளைந்து நெழிந்து உடம்பை குலுக்கி எடுத்து விடும்.

ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு

ரோலர்கோஸ்டர் ஷாக்

சில சமயங்களில் மூச்சு திணறவும் வைக்கும். இந்நிலையில் 8 பேர் ரோலர்கோஸ்டரில் பயணம் செய்தனர். இவர்களில் 8 வயது குழந்தையும் அடங்கும். இந்த ரோலர்கோஸ்டர் கார் மேலே ஏறி சென்ற போது திடீரென மாட்டிக் கொண்டது. கிட்டதட்ட தலைகீழாக தொங்கியது போன்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

நடுக்கடலில் பற்றி எரிந்த 3,000 கார்கள்… களேபரமான சரக்கு கப்பல்… அதிர்ந்த வட கடல்!
திடீர் தொழில்நுட்ப கோளாறு

அப்படியே சுமார் 40 நிமிடங்கள் மாட்டிக் கொண்டனர். ரோலர்கோஸ்டர் நகரவே இல்லை. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தொடர்ந்து போராடினர். ஆனால் ரோலர்கோஸ்டரை நகர்த்த முடியவில்லை.

8 பேர் தொங்கியபடி திக் திக்

ஒருவழியாக மாட்டிக் கொண்ட 8 பேரை மட்டும் பத்திரமாக மீட்டனர். அடுத்த சில நிமிடங்களில் ரோலர்கோஸ்டரில் இருந்த பிரச்சினையையும் தீர்த்துவிட்டனர். இதுதொடர்பாக பேசிய பொழுதுபோக்கு பூங்காவின் தாய் நிறுவனமான ஸ்டாக்வேல்யூ குழுமத்தின் மேலாண் இயக்குநர் மார்க் மில்லர்,

40 நிமிடங்கள் பரபரப்பு

எங்களின் திறன் வாய்ந்த குழுவினர் மீட்பு பணிகளை வேகமாக மேற்கொண்டனர். இவர்கள் தேசிய அளவில் சிறப்பான பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுள்ளனர். சரியாக 40 நிமிடத்தில் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். அனைவரும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.

மீண்டும் ஆபத்து? மிரட்டும் மெர்ஸ் வைரஸ்… WHO எச்சரிக்கை!

பத்திரமாக மீட்கப்பட்ட மக்கள்

பின்னர் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இனிமேல் பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளப்படும் என்று மார்க் மில்லர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.