இயக்குனர் : விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன்
நடிகர்கள் : கிஷன் தாஸ், மோனிகா சின்னகோட்லா, சௌந்தர்யா நந்தகுமார்
ஓடிடி : ஆஹா
சென்னை: அறிமுக இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கத்தில் திகிலூட்டும் திரைப்படம் தான் சிங்க்.
ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடிக்கூடிய இந்த திகில் திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
சிங்க் திரைப்படம்: இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கிஷன் தாஸ், ஒரு தயாரிப்பாளரை சந்தித்து கதை சொல்லுகிறார். ஆனால், கதை தயாரிப்பாளருக்கு பிடிக்காததால், இந்த வாய்ப்பும் கை நழுவிப்போகிறது. இதனால், மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட கிஷன் தாஸின் காதலின் அவரின் மன அழுத்தை போக்க நண்பர்களுடன் சேர்ந்து பாண்டிச்சேரிக்கு ட்ரிப் போக பிளான் போடுகிறார்.
எதிர்பாராத விபத்து: அனைவரும் பாண்டிச்சேரிக்கு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் மீது கார் மோதி விடுகிறது. அந்த விபத்தை மறைக்க போலீசுக்கு பணம் கொடுத்து, இந்த விபத்தை மறைத்துவிட்டு நண்பர்கள் நான்கு பேரும், அங்கிருந்து தப்பித்து வந்து விடுகிறார்கள்.
படத்தின் கதை: பின் நான்கு பேரும் வீடியோ காலில் இணைந்து பேசும் போது, விபத்தில் சிக்கிய அந்த பெண் இறந்து போன விஷயம் தெரியவர அனைவரும் பதற்றம் அடைகின்றனர். அதே நேரம் அனைவர்கள் வீட்டிலும் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் என்ன? இந்த பிரச்சினையில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதே இப்படத்தின் படத்தின் ஒன் லைன் கதை.
கிளைமாக்ஸில் செம ட்வீஸ்ட்: விஜய்சேபதி நடித்த பீட்சா திரைப்படம் போல கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்று இறுதியில் செம ட்விஸ்டுடன் கதையை முடித்தது எதிர்பாராத ட்வீஸ்டாக இருந்தது. ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடிக்கூடிய இந்த படத்தில், கிஷன் தாஸ், மோனிகா சின்னகோட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் ஆகிய நான்கு பேருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
பயமுறுத்தும் இசை: படம் ஆரம்பிக்கும் போது இருந்த விறுவிறுப்பு பாதியில் குறைந்துவிடுகிறது. இது இந்த படத்தின் மைனஸ் என்று சொல்லாம். மற்றபடி அறிமுக இயக்குநர் விகாஸ் இப்போது இருக்கும் டெக்னாஜியை வைத்து ஒரு நல்ல ஹாரர் தில்லர் படத்தை கொடுத்து இருக்கிறார். அபிஜித் ராமசாமியின் பின்னணி இசையால் சில இடங்களில் படம் பார்ப்பவர்களை பயமுறுத்துகிறது. ஆஹா ஓடிடியில் இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. த்ரில்லர் படத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.