யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற பேச்சு அவ்வப்போது எழுகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான். அது எங்கள் தலைவர் தான் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். உங்கள் தலைவர் மாஜி சூப்பர் ஸ்டார், எங்க விஜய்ணா தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இந்நிலையில் ஜூலை 28ம் தேதி அதாவது ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடந்த அன்று தான் மலையாள நடிகரான துல்கர் சல்மானின் பிறந்தநாளாகும்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சீதாராமம் படத்தில் துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடித்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவருக்கு பிறந்நதாள் வாழ்த்து தெரிவித்தார் மிருணாள் தாகூர். அப்படி துல்கரை வாழ்த்தும்போது அவரை சூப்பர் ஸ்டார் என்றார் மிருணாள்.
View this post on InstagramA post shared by Mrunal Thakur (@mrunalthakur)
அவர் ஏதோ மனதில் பட்டதை சொல்ல, தமிழ் சினிமா ரசிகர்களோ மிருணாளுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சூப்பர் ஸ்டார் தலைப்பு தொடர்பாக இங்கு ஒரு பெரிய பஞ்சாயத்தே போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீங்கள் பாட்டுக்கு துல்கர் சல்மானை சூப்பர் ஸ்டார் என்கிறீர்கள். அப்படிலாம் சொல்லக் கூடாதுமா என தெரிவித்துள்ளனர்.
விஜய் தான் நடப்பு சூப்பர் ஸ்டார் என தளபதி ரசிகர்கள் கூறுவதற்கு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக்கதை மூலம் குட்டு வைப்பார் தலைவர் என்றார்கள் ரஜினி ரசிகர்கள்.
Dhanush:நாய், காக்கா என்ற ரஜினி: அன்றே சரியாக சொன்ன தனுஷ் எனும் தலைவர் ரசிகர்கள்
இந்நிலையில் ரஜினி சொன்ன குட்டிக்கதை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. குரைக்கும் நாய், சீண்டும் காக்கா என்று பேசியிருக்கிறார் ரஜினி. இப்படி எல்லாம் பேசும் ஆளே இல்லை அவர். சூப்பர் ஸ்டார் பட்டத்தை அவர் ஒருபோதும் சீரியஸாக எடுத்துக் கொண்டதும் இல்லை.
அப்படி இருக்கும்போது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் இப்படி பேசியிருக்கிறார் என்றால் தேவையில்லாத ஒப்பீடுகள் அவரை பாதித்துவிட்டதா என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக வெளியான ஜுஜுபி மற்றும் ஹுகும் பாடல்களிலும் விஜய்யை தான் குத்திக்காட்டியிருக்கிறார் ரஜினி என பேச்சு கிளம்பியது. இந்த குரைக்கும் நாய், சீண்டும் காக்காவுக்கு களவாணி கண்ணையாவே எவ்வளவோ மேல் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.
இதற்கிடையே நீங்கள் தான் இங்கு சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு அடித்துக் கொள்கிறீர்கள். வட இந்திய மீடியாக்களோ சூர்யா, தனுஷை பற்றி செய்தி வெளியிடும்போது எல்லாம் சூப்பர் ஸ்டார் என்று தான் எழுதுகின்றன. அதனால் சூப்பர் ஸ்டார் தலைப்பு ஒருவருக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்று ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது.
Tamannaah: தமன்னாவின் ரூ. 2 கோடி வைர மோதிரம்: விஜய் என்ன இப்படி பொசுக்குனு கலாய்ச்சுட்டாரு
பேசுபவர்கள் பேசுங்கள். விரைவில் நடக்கவிருக்கும் லியோ இசை வெளியீட்டு விழாவில் இதற்கெல்லாம் நெத்தியடி கொடுப்பது போன்று விஜய்ணா ஒரு சூப்பர் குட்டிக்கதை சொல்வார். அவர் தற்போது நாட்டில் இல்லாத நேரத்தில் கண்டபடி பேசுவது நியாயமில்லை என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
லியோ பட வேலையை முடித்த விஜய் வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.