வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: சிறந்த ஆடை அணிந்த பெண்மணியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக் ஷதா மூர்த்தியை பிரபல பத்திரிகை பாராட்டி உள்ளது.
இங்கிலாந்தின்
பிரதமராக இருந்து வருபவர் ரிஷி சுனக், இவரது மனைவி அக் ஷதா மூர்த்தி இவர்
பிரபல ஐ.டி.,நிறுவனமான இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தியின்
மகளாவார். இவர் ஸ்டாண்ட்போர்டு பல்கலையில் எம்.பி.ஏ., பட்டமும் லாஸ்
ஏஞ்சல்ஸில் பேஷன் டிசைனர் படிப்பில் டிப்ளமோவும் பெற்றுள்ளார். மேலும்
அவர் சொந்தமாக ஆடை வடிவமைப்பை தொழிலையும் நடத்தி வந்தார். இருப்பினும்
சில சூழ்நிலை காரணமாக கடந்த 2017 ல் அதனை கைவிட்டார்.
இந்நிலையில்
இங்கிலாந்தில் இருந்து வெளி வரும் பேஷன் குறித்த பத்திரிகையான டாட்லர்
அக்ஷதா மூர்த்தியை சிறந்த ஆடை அணிந்த பெண்மணியாக தேர்வு செய்துள்ளது. இது
குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் சாண்ட்லர் ட்ரெகாஸ்கஸ் நவீன கால
ராஜதந்திர ரீதியில் ஆடை அணிவதற்கு ஒரு சிறந்த உதாரணம் என பாராட்டி
உள்ளார். கடந்த காலகட்டத்திலும் அக்ஷதா பேஷன் டிசைனுக்காக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமராக தனது கணவர் ரிஷி சுனக் உடன்
பங்கேற்கும் அரசு விழாக்கள் மற்றும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு
விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்போது அணிந்திருந்த
ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement