இஸ்லமபாத்: பாகிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பகதுன்வா மாகாணம் உள்ளது. அந்த நாட்டின் 4-வது பெரிய மாகாணமாக கைபர் பகதுன்க்வாவில் உள்ள பஜவுர் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஜேயூஐ.எப் (JUI-F) என்ற அமைப்பு சார்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று இருந்தனர்.
அப்போது அந்தக் கூட்டத்தில் திடிரென்று வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஜேயூஐ.எப் அமைப்பின் முக்கிய தலைவரான மவுலானா ஜியுவுல்லா ஜான், இந்த குண்டு வெடிப்பில் பலியானதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.