வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 23 கோடி ரூபாய் வரையில் நிதி உதவி அளித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நொய்டாவைசேர்ந்த சமூக ஆர்வலர் அமித்குப்தா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டு இருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது: 2019-ல் ரூ.1.30 கோடியும், 22-ம் ஆண்டில் ரூ.7.12 கோடியும், 23-ம் ஆண்டில் 10.93 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.மேலும் 2021 ம் ஆண்டில் 22 பேர் 2022-ல் 12 பேர் என மொத்தம் 34 பேர்களுக்கு அரிய வகை நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் 2022 மே 19ம் தேதி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கை ஒன்றில் எந்தவொரு மையத்திலும் சிகிச்சைக்காக, அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரூ.50 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன்படி 2022-23 நிதியாண்டில், அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட 203 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க என்.பி 50 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது என அதன் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement