Jailer Trailer: முத்துவேல் பாண்டியன் பராக்.. பரபரக்கும் ஜெயிலர் ட்ரெய்லர் அப்டேட்!!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், ஜெயிலர் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து செம்ம மாஸ்ஸான அப்டேட் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஜெயிலர் ட்ரெய்லர் அப்டேட்: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு செம்ம மஜாவான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், ரஜினியின் 169வது படமாக உருவாகியுள்ளது. ரஜினியுடன் தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ரிட்டையர்டு ஜெயிலர் கேரக்டரில் ரஜினி நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது மகனாக ‘ராக்கி’ பட பிரபலம் வசந்த் ரவி நடித்துள்ளார். நேர்மையான போலீஸ் ஆபிஸரான தனது மகன் வசந்த் ரவியை, வில்லன்களிடம் இருந்து ரஜினி எப்படி மீட்கிறார் என்பது தான் ஜெயிலர் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 28ம் தேதி நடைபெற்ற இதில் ரஜினி உட்பட ஜெயிலர் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது வைரலானது. அதேபோல் அவர் சொன்ன குட்டி ஸ்டோரியும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக ஜெயிலர் படத்தின் பாடல்களை வெளியிட்ட படக்குழு, ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கவில்லை. இசை வெளியீட்டு விழாவிலேயே ஜெயிலர் ட்ரெய்லரும் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார்கள். இதனால் ஜெயிலர் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி ஜெயிலர் ட்ரெய்லர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும், ஆகஸ்ட் 2ம் தேதி முத்துவேல் பாண்டியன் என்ட்ரி தரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. டீசரை வெளியிடாமல் நேரடியாக ட்ரெய்லர் மட்டும் ரிலீஸ் செய்யலாம் என படக்குழு தரப்பில் இருந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். ஜெயிலர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், 2ம் தேதி வெளியாகும் ட்ரெய்லர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.