சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளில் ஒன்றாக இருப்பது ரஷ்யா – உக்ரைன் போர். சில வாரங்கள், சில மாதங்கள் நீடித்தால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓராண்டிற்கும் மேலாக போர் தொடர்வது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பலம் வாய்ந்த ரஷ்யாவா இப்படி? எனக் கேட்க வைக்கிறது.
இருதரப்பிலும் இழப்புகளுக்கு பஞ்சமில்லை. உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவிற்கு ஆதரவாக சில நாடுகளும் நிற்கின்றன. ஐரோப்பாவில் இருந்து உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் தொடர்வது கவனிக்கத்தக்கது.
அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி வைத்த ரஷ்யா… மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த புதின்!
ரஷ்யா – உக்ரைன் போர்
இந்த விவகாரம் இந்தியாவின் நிலைப்பாடு டை பிரேக்கர் போலத் தான். எந்த ஒரு பக்கமும் சாயவில்லை. ஏனெனில் இருபுறமும் இருந்து சில ஆதாயங்கள் இந்தியாவிற்கு தேவைப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவிற்கு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் விடாப்பிடியாக இருந்து வருகிறார். உக்ரைன் அடிபர் ஜெலன்ஸ்கி மட்டும் என்ன சும்மாவா?
ரோலர் கோஸ்டரில் தலைக்குப்புற… 40 நிமிட திக் திக்… இங்கிலாந்து தீம் பார்க்கில் நடந்த பகீர்!
பிரம்மாண்ட அணிவகுப்பு
விடாமல் பதிலடி கொடுத்த வண்ணம் இருக்கிறார். இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பெரிய சம்பவத்தை அதிபர் புடின் நேற்றைய தினம் அரங்கேற்றியுள்ளார். வருடாந்திர கடற்படை தினத்தை ஒட்டி, நேவா ஆறு மற்றும் பின்லாந்து வளைகுடாவில் பிரம்மாண்ட அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 3 ஆயிரம் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதிபர் புடின் செஞ்ச சம்பவம்
மேலும் போர் கப்பல்களை நீண்ட அணிவகுப்பில் இடம்பெறச் செய்தனர். இவற்றை நேரில் சென்று பார்க்கும் வண்ணம் படகுகள் மூலம் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜேய் சோய்கு மற்றும் அதிகாரிகள் உடன் அதிபர் புடின் புறப்பட்டு சென்றார். ஒட்டுமொத்த அணிவகுப்பையும் பார்ப்பதற்கு மெய் சிலிர்க்கும் வண்ணம் இருந்தது.
பயங்கரம்..! பாகிஸ்தானில் அரசியல் மாநாட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. 40 பேர் உடல் சிதறி பலி
தேசிய கடற்படை தினம்
உக்ரைன் உடனான போர், சர்வதேச அளவில் அரசியல் அழுத்தம், அணு ஆயுதப் பயன்பாடு குறித்த எச்சரிக்கை போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் நடந்த கடற்படை தின அணிவகுப்பை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை.
”என்னுடைய பலத்தை பாருங்கள். மோதினால் துவம்சம் தான்”
எனச் சொல்லாமல் சொல்வது போல் இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
புதிதாக வரும் போர் கப்பல்கள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புடின், ரஷ்ய ராணுவத்தின் பலம் தொடர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது. நடப்பாண்டில் மட்டும் வெவ்வேறு பிரிவுகளில் 30 போர் கப்பல்கள் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளன. தேசிய கடற்படை கொள்கைகளில் தொலைநோக்கு அடிப்படையில் சில திட்டங்களை வகுத்து கொண்டிருப்பதாக கூறினார்.