சென்னை: தமிழகத்தில் உள்ள வி.ஏ.ஓக்களுக்கு கை துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில அரசின் உள்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால் கை துப்பாக்கி வழங்கப்படுமா? இல்லை வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் கையாளப்படுமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இருக்கும் முக்கியமான அச்சுறுத்தல் என்பது மணல் கடத்தல் கும்பலால் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட அரசு […]
