தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்களின் கூட்டணி மீண்டும் லியோ மூலம் இணைந்துள்ளது. இதன் காரணமாக இப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தன் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் ஓய்வெடுக்க லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சில நாட்கள் லண்டனில் ஓய்வெடுத்துவிட்டு லியோ படத்தின் டப்பிங் வேலைகளை விஜய் துவங்கிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விஜய் விலகியது ஏன்?
இதையடுத்து விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கி அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கின்றது என தகவல்கள் வருகின்றன.
Jailer: ஜெயிலர் படத்தின் வசூலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்..சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலையா ?
இந்நிலையில் இதெல்லாம் ஒருபக்கம் இருக்கையில் புகழ்பெற்ற இயக்குனரான விக்ரமன் விஜய்யை பற்றி பேசிய விஷயம் தான் தற்போது வைரலாகி வருகின்றது. விஜய்க்கு அவரின் திரைப்பயணத்தில் முதல் வெற்றியை கொடுத்த இயக்குனர் தான் விக்ரமன். ஒரு வெற்றிக்காக போராடி வந்த விஜய்க்கு தக்க சமயத்தில் பூவே உனக்காக என்ற படத்தை கொடுத்து ரசிகர்களின் மனதில் விஜய்யை பதியச்செய்தார் விக்ரமன்.
கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வாறு இருக்கையில் பூவே உனக்காக படத்திற்கு பிறகு விஜய் மற்றும் விக்ரமன் ஏன் மீண்டும் இணையவில்லை என்ற கேள்வி பலரிடமும் இருந்து வருகின்றது. அந்த கேள்விக்கு
தற்போது விக்ரமன் பதிலளித்துள்ளார்.
விக்ரமன் பதில்
அவர் கூறியதாவது, உன்னை நினைத்து படத்தில் சூர்யாவிற்கு பதிலாக முதலில் விஜய் தான் ஹீரோவாக நடித்து வந்தார். ஒரு சில நாட்கள் விஜய்யை வைத்து நான் படப்பிடிப்பை நடத்தினேன். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்க்கு உடன்பாடில்லை. கிளைமாக்ஸை மாற்றச்சொன்னார் விஜய்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஆனால் நான் கிளைமாக்ஸை மாற்றுவதாக இல்லை. எனவே தான் விஜய் உன்னை நினைத்து படத்தில் இருந்து விலகினார். என்னதான் விஜய் உன்னை நினைத்து படத்தில் இருந்து விலகினாலும் நாங்கள் நட்பாகவே தான் இருந்து வருகின்றோம். எந்த மோதலும் இல்லாமல் சமரசமாக பேசி தான் நாங்கள் பிரிந்தோம் என கூறினார் விக்ரமன் என்பது குறிப்பிடத்தக்கது.