அமராவதி:
தேர்தலின் போது மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சி உட்பட ஆந்திராவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு முலபர்த்தி ராமராஜு என்பவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
அவருக்கு எதிராக ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இந்த தேர்தலில் அவருக்கு கடும் போட்டியாளராக ஆளுங்கட்சி வேட்பாளர் இருந்தார்.
யாரு டெல்டாகாரன்.. மீத்தேனுக்கு கையெழுத்து போட்டதும் இந்த டெல்டாகாரன் தானே.. ஸ்டாலினை வச்சு செய்த சீமான்
இருந்தபோதிலும், நகராட்சி முழுவதும் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முலபர்த்தி ராமராஜு. அப்போது நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு தினமும் சுத்தமான குடிநீர் வசதி செய்து தருவேன்; தரமான சாலைகளை அமைப்பேன்; மின்விளக்குகளை அமைப்பேன், கழிவுநீர் வடிகால்களை கட்டுவேன் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இந்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அந்தப் பகுதி மக்களுக்கு நன்றாக பரீச்சயமானவர் என்பதால் பெரும்பாலான மக்கள் ராமராஜுக்கு வாக்களித்து அவரை கவுன்சிலர் ஆக்கினர்.
மகளிர் உரிமைத் தொகை வழங்க பணம் இல்லை.. போலீஸுக்கு ரூ.25 கோடி டார்கெட்.. ஜெயக்குமார் பகீர் தகவல்
இதனிடையே, கவுன்சிலராக பதவியேற்ற பிறகு தனது நகராட்சிக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை செய்ய தீவிரமாக முயற்சித்தார் ராமராஜு. ஆனால் ஆளுங்கட்சி விடுவார்களா? அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இவ்வாறு 31 மாதங்கள் ஓடி போய்விட்டன. அவரால் தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மக்களும் அவரை கேள்வி கேட்க தொடங்கினர்.
மக்களுக்கு நல்லது செய்ய மனம் இருந்தும் தன்னால் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என ராமராஜு உச்சக்கட்ட வேதனையை அடைந்தார். இந்நிலையில், இன்று நகர சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமராஜு எழுந்து, “என்னை நம்பி பல ஆயிரம் மக்கள் வாக்களித்தனர். நான் அவர்களுக்கு நல்லது செய்வேன் என்று நம்பி தானே அவர்கள் எனக்கு ஓட்டு போட்டிருப்பார்கள். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லையே எனக் கூறிக்கொண்டே தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னை தானே சரமாரியாக அடித்துக் கொண்டார் ராமராஜு. பின்னர் கூட்டத்தில் இருந்து அழுதுகொண்டே அவர் வெளியேறினார்.