விஜய், வெங்கட் பிரபு கூட்டணி இணையும் படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். தற்போது ‘லியோ’ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ள நிலையில், விரைவில் ‘தளபதி 68’ படம் குறித்த வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘தளபதி 68’ படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது. கோலிவுட் சினிமாவே பெரிதும் எதிர்பார்க்கும் படமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தினை லியோ பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தப்படத்தின் பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘லியோ’ படத்தின் ஷுட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் இந்தப்படத்தில் கேஜிப் வில்லன் சஞ்சய், பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். மேலும், அனிருத் இசையமைத்துள்ள ‘லியோ’ படம் வரும் அக்டோபர் 10 ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் ‘லியோ’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தினை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. ஏனென்றால் அஜித் நடிப்பில் ‘மங்காத்தா’ என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த வெங்கட் பிரபு, தற்போது விஜய்யுடன் இணையவுள்ளது ரசிகர்கள் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆக உள்ளது.
Vishal: மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்: வைரலாகும் போட்டோஸ்.!
மேலும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதும் ‘தளபதி 68’ படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு எகிற செய்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கட் பிரபு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட போவதாக அறிவித்தார். அது விஜய் படம் குறித்த அப்டேட்டாக தான் இருக்கும் என ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருந்தனர். ஆனால் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
இதனால் விஜய் ரசிகர்கள் கடுமையாக அப்செட் ஆகி விட்டார்கள். நாங்க ‘தளபதி 68’ அப்டேட்காக வெயிட் பண்ணா, நீங்க இப்படி பண்ணிட்டீங்களே சார் என கமெண்டில் வருத்தத்துடன் பதிவுவிட்டு வந்தனர். மேலும் ஒரு ரசிகர் விஜய் பட அப்டேட் என நினைத்ததாக கமெண்ட் பண்ணினார். அவருக்கு பதிலளித்த வெங்கட் பிரபு, ’தளபதி 68’ அறிவிப்பு சும்மா தெறிக்கும். ‘காத்திருங்கள்’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட்டை வைரலாகி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது: பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பதிவு.!