கல்வி, கருத்து, கண்டுபிடிப்பு, செய்திகளை உலகில் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக காகிதம் உள்ளது. படிக்கும் புத்தகம், வாசிக்கும் நாளிதழ் என அன்றாட வாழ்க்கையில் காகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘பேப்பர் டெல்ஸ்’ எனும் இந்தியாவின் முதல் கைவினை காகித ஆலை மஹாராஷ்டிராவின் புனேயில் 1940 ஆக., 1ல் துவக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக 2017 முதல் ஆக., 1ல் தேசிய காகித தினம் கடைபிடிக்கப்படுகிறது. காகிதம் 100 சதவீதம் சுற்றுச் சூழல், மறு சுழற்சிக்கு ஏதுவானது. எளிதில் மக்கும் தன்மை உடையது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement