டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடக்க உள்ளது. அப்போது 198 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே கனமழை பெய்யும் அபாயம் உள்ளதால் அங்கு தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் கானுன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 264 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.
Related Tags :