எதிர்பார்க்கும் கூட்டணிதற்போது தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களின் பட்டியலில் இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். உலகநாயகனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் இந்திய திரையுலகமே அறியப்படும் இயக்குனராக உருவெடுத்தார். இதையடுத்து தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 திரைப்படத்தை இயக்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன. என்னதான் இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இது உறுதியான தகவலாகவே இருக்கின்றது. இதைத்தொடர்ந்து லோகேஷ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் உருவாகவிருக்கும் தலைவர் 171 ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றது
தள்ளிப்போகும் கைதி 2லோகேஷ் விஜய்யின் லியோ படத்தை அடுத்து கார்த்தியின் கைதி 2 படத்தை தான் இயக்குவதாக இருந்தார். ஆனால் ரஜினியே லோகேஷை அழைத்து அவரின் இயக்கத்தில் ஒரு படம் பண்ணவேண்டும் என கேட்டுக்கொண்டதால் லோகேஷ் கைதி 2 படத்தை தள்ளிவைத்து விட்டு ரஜினி பட வேலைகளில் இறங்கினார். மேலும் இப்படம் தான் ரஜினி நடிக்கும் கடைசி படமாகவும் இருக்கும் என ஒரு தகவல் உலா வந்துகொண்டிருக்கின்றன. எனவே தலைவர் 171 திரைப்படத்தை ரஜினிக்கு மறக்கமுடியாத ஒரு வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் லோகேஷ் இருக்கின்றார். தற்போது லியோ படம் ரிலீசான பிறகு இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக துவங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது
தயாரிப்பாளர் யார் ?ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணி முடிவான நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற கேள்வி தான் அனைவரிடமும் இருந்து வருகின்றது. ஒரு சிலர் தலைவர் 171 திரைப்படத்தை லியோ தயாரிப்பாளர் லலித் தான் தயாரிப்பார் என்கின்றனர். மேலும் ஒரு சிலர் தலைவர் 171 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் தற்போது வரை தலைவர் 171 படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் லோகேஷிடம் தலைவர் 171 படத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டதிற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து தான் தகவலை வெளியிடுவார்கள் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தலைவர் 171 படத்தில் கமல் ?இந்நிலையில் தற்போது வெளியான ஒரு தகவல் ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தலைவர் 171 திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் வாய்ப்பும் இருக்கின்றதாம். அதுவும் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக கமல் நடிப்பார் என்றும் ஒரு தகவல் தற்போது பரபரப்பாக பரவி வருகின்றது. தலைவர் 171 திரைப்படம் ரஜினியின் கடைசி படம் என்பதால் தன் நண்பருக்காக கமல் வில்லனாக நடிக்கின்றார் என சொல்லப்படுகின்றது. தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்திலும் வில்லனாக கமல் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாக கமல் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது